ஏரல், செப். 1: ஏரல் அருகே திருப்பணிசெட்டி குளம் பஞ்சாயத்து வலசக்காரன்விளை தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆதிதிராவிடர் நலன் துணை தாசில்தார் கைலாச குமாரசாமி, திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், பள்ளி தாளாளர் ஜெபராஜ், தலைமை ஆசிரியை மரியலிகலா கலந்து கொண்டனர்.