வலங்கைமான்: வலங்கைமான் அருகேயுள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. வலங்கைமான் அருகேயுள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை வலங்கைமான் ஒன்றிய சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இம் முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி சினை பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், மற்றும் விவசாய கடன் அட்டை வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.