வலங்கைமான், ஆக. 6: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த கீழஅமராவதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கேரளா மாநிலம் வயநாட்டில் பேரிடரால் உயிர் இழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அஞ்சலி செலுத்தினர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரியில் முந்றூற்றுக்கு மேற்பட்டோர் உயிர் இழந்தனர். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் அனுதாபம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வலங்கைமான்அடுத்த திருவோணமங்கலம் ஊராட்சி கீழஅமராவதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், வயநாட்டில் பேரிடரால்இறந்துபோனவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இனியாவது விழிப்புணர்வு கொள்வோம், வருமுன் காப்போம், இப்படி ஒரு துயர நிகழ்வு நடக்காமல் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, உதவி ஆசிரியர் பாலசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.