வலங்கைமான்: வலங்கைமான் டி.சி.டி.யூ காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் நினைவு தினம் காங்கிரஸ் தொழிற்சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் குலாம்மைதீன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. டிசிடியூ நகர தலைவர் அஹமது மைதீன், முன்னாள் நகர தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திராகாந்தி உருவ படத்திற்கு வட்டார செயலாளர் விஜயகாந்த் மாலை அணிவித்து அனைவராலும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது . இதில் சிபிஐ விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் சின்னராஜா, திமுக ஒன்றிய துனை செயலாளர் சீனிவாசன், சிங்கராஜ், இளைஞர் அணி ஜாசீர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.