உடன்குடி, ஆக.24: உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் சாய்பக்த ஆஞ்சநேயர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலை 8.30மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பகல் 11.30மணிக்கு சாய்பக்த ஆஞ்சநேயர், மகாஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
வருஷாபிஷேகம்
previous post