மதுரை, ஜூலை 2: மதுரை வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஷாலினி. இவர் தற்போது சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் மதுரை முன்னாள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தவர் ரவிக்குமார். இவர் தற்போது மதுரை மாநகராட்சி (வடக்கு) உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.