உடுமலை, ஆக. 31: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம்முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.கள்ளக்குறிச்சி மாவட்ட தனி வட்டாட்சியர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதற்காக பணியிடை நீக்கம் செய்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரை கண்டித்து இந்த போராட்டம் நடடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.