நாமக்கல், ஜூலை 7: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். இதில், அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையில் பொதுக் கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். அடிக்கடி இடமாற்றம் செய்வதை தவிர்த்து, ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே மாறுதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டம்
41
previous post