அணைக்கட்டு, ஜூன் 11: அணைக்கட்டு தாலுகாவில் வரும 19ம் ேததி முதல் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மே மாதம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் வரும் 19ம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், அணைக்கட்டு தாலுகாவில் பசலி 1433ம் ஆண்டு நிலவரி கணக்கு தணிக்கை ஜபாபதி நிகழ்ச்சி வரும் 19ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. வருவாய் தீர்வாய அலுவலராக வேலூர் கலால் உதவி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி முதல் நாள் 19ம் தேதி அணைக்கட்டு உள் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது. 20ம் தேதி ஊசூர் உள் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கும், 21ம் தேதி பள்ளிகொண்டா உள் வட்டத்துக்குட்பட்ட கிராமங்களுக்கும், 25ம் தேதி ஒடுக்கத்தூர் உள்பட்ட கிராமங்களுக்கும், 26ம் தேதி அகரம் உள்வட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது. ஜமாபந்தி நடைபெறும் நாள் அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டா மாற்றம், அரசு நல திட்ட உதவிகள், கிராம வளர்ச்சி திட்ட பணிகள், குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் இதர வசதிகள் தொடர்பான மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரடியாக வழங்கலாம். ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் தகுதியான பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளும் தீர்வு ஏற்படுத்தப்பட்ட மனுக்களுக்கு அதற்கான நகலும் வழங்கப்படும். இதற்காக கிராமங்களில் வருவாய் கணக்குகளை சரி பார்த்து தயார் நிலையில் வைத்துக் கொள்வது உள்ளிட்ட பணிகளை செய்ய விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றனர்.
வரும் 19ம் தேதி முதல் ஜமாபந்தி தொடக்கம் அதிகாரிகள் தகவல் அணைக்கட்டு தாலுகாவில்
108