உடன்குடி, செப். 3: பரமன்குறிச்சி பஞ். முருகேசபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் புவனேஷ் வரவேற்றார். பஞ். தலைவர் லங்காபதி முன்னிலை வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின், திட்டத்தை விரிவாக எடுத்துரைத்தார். முகாமில் பல்வேறு மருத்துவ பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சித்தா மற்றும் பல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட நலக்கல்வியாளர் முத்துக்குமார், பள்ளி தாளாளர் ராஜ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் ஆழ்வார் நன்றி கூறினார்.
வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
previous post