வருசநாடு, ஏப். 10: வருசநாடு அருகே பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் அங்கன்வாடி கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் 2009ம் ஆண்டு அங்கன்வாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் திறப்பு விழா காணாமல் பூட்டியே கிடக்கிறது. இந்த கட்டிடத்தை திறக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். மேலும் அங்கன்வாடி மையம் திறக்கப்படாததால் குழந்தைகள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்த கட்டிடத்தை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.