Saturday, April 13, 2024
Home » வரி பாக்கி செலுத்த உள்ளாட்சிகள் உத்தரவு

வரி பாக்கி செலுத்த உள்ளாட்சிகள் உத்தரவு

by Ranjith

 

கோவை, மார்ச்.19: கோவை மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வரி விதிப்புகள் இருக்கிறது. வரி விதிப்பு கடந்த 2 ஆண்டாக அதிகமாக இருக்கிறது. வளர்ச்சியடைந்த பகுதி, அடிப்படை வசதியில்லாத பகுதி என பாகுபாடின்றி வரி உயர்த்தப்பட்டதால் மக்கள் தவிப்படைந்தனர். குறிப்பாக குடிநீர் இணைப்பு, ரோடு, சாக்கடை கால்வாய், தெரு மின் விளக்கு, மைதானம், மயானம் என அடிப்படை வசதிகள் நிறைவேறாத பகுதிகளுக்கு, வளர்ச்சி பெற்ற பகுதிக்கு இணையாக அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளில் உள்ள வீடுகளுக்கும் வரி உயர்வு அதிகரிக்கப்பட்டது.

திட்ட பணிகள் நடக்காத நிலையில் வரி உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். பொதுமக்கள் சாக்கடை கால்வாய், தெரு விளக்கு அமைக்காமல் வரி ெதாகையை அதிகரிக்கப்பட்டதிற்கும், குப்பை வரியாக 120 ரூபாய் முதல் 400 ரூபாய் விதிக்கப்பட்டதிற்கும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். வீடு, வீடாக வரி வசூல் செய்ய செல்லும் அலுவலர்களை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் குடிநீர் கட்டணமாக ஊராட்சி, பேரூராட்சிகளில் 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் குடிநீர் கட்டணம் 1200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது.

குடிநீர் அளவை கண்டறிய மீட்டர் எதுவும் அமைக்காமல் உத்தேசமாக பெரும் தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டதால் மக்கள் தவிப்படைந்துள்ளனர். தேர்தல் பணி இருப்பதால், பெரும்பாலான உள்ளாட்சிகளில் வரி வசூல் நடக்கவில்லை. 50 சதவீதம் வரி வசூல் மந்தமாக நடப்பதாக தெரிகிறது. வரி கட்டாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பேரூராட்சி, ஊராட்சிகளில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கெடுபிடி காட்டுவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

six − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi