ராமநாதபுரம், ஜூன்27: திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹி அம்மன் கோயிலில் 9 நாள் ஆஷாட நவராத்திரி நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.
ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான சிவன் கோயிலான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தலமான வராஹி அம்மனுக்கு தனி கோயில் உள்ளது. இதிலுள்ள அம்மன் சுயம்புவாக உருவாகியதால் ஒற்றைக்கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது.