தர்மபுரி, ஜூன் 7: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், நல்லம்பள்ளி, மொரப்பூர், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் சின்னவெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். இவை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தர்மபுரி உழவர் சந்தைக்கு, கடந்த மாதத்தில் 250 கிலோ வரை வரத்து இருந்தது. இந்நிலையில் மழை காரணமாகவும், அறுவடை முடிந்ததையடுத்தும் சின்னவெங்காயத்தின் வரத்து சரிந்தது. இதன் காரணமாக நேற்று உழவர் சந்தைக்கு, 150 கிலோ சின்ன வெங்காயம் வரத்து இருந்தது. இது ஒரு கிலோ ரூ.68 வரை விற்பனையானது. இதே போல், கடந்த மாதம் முதல்வாரத்தில் ரூ.85க்கு விற்பனையான முருங்கைக்காய் நேற்று ரூ.100க்கு விற்பனையானது. கடந்த மாதம் 31ம் தேதி 180க்கு விற்பனையான பச்சைப்பட்டாணி நேற்று ரூ.290க்கு விற்பனையானது. ரூ.274க்கு விற்பனையான ப்ரோக்கோலி நேற்று ரூ.296க்கு விற்பனையானது.
வரத்து சரிவால் வெங்காயம் விலை உயர்வு
0
previous post