Saturday, March 2, 2024
Home » வரத்து குறைவால் பூண்டு விலை கிடு, கிடு உயர்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

வரத்து குறைவால் பூண்டு விலை கிடு, கிடு உயர்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

by Francis

 

தஞ்சாவூர், பிப்.3: வரத்து குறைவால் தஞ்சாவூரில் பூண்டு விலை கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் உள்பட தென்னிந்தியாவில், பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அதிக அளவில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. அந்த மாநிலங்களில் பூண்டு ஒரு பணப்பயிராகும். இதனால் அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் மற்றும் காமராஜர் காய்கறி மார்க்கெட்டிற்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டு பூண்டு ரூ.270 முதல் 300க்கு விற்பனை செய்யப்பட்டது. சைனா பூண்டு ரூ.250-க்கும், சீடுபூண்டு ரூ.240-க்கும் விற்பனையானது. கடந்த வாரம் வரை பூண்டு வரத்து அதிகளவில் இருந்தது.

ஆனால் தற்போது வரத்து குறைவால் நாட்டு பூண்டு கிலோ ரூ.400-க்கும், சீடு பூண்டு ரூ.3800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சைனா பூண்டு வரத்து இல்லை. கடந்த சில வாரங்களாக பூண்டு கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரை விற்ற நிலையில் நேற்று பூண்டு விலை கிடு, கிடுவென உயர்ந்து ரூ.400க்கு விற்கப்படுகிறது. இது குறித்து பூண்டு வியாபாரிகள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வழக்கமாக 60 டன் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் விளைச்சல் குறைவால் நேற்று தஞ்சாவூருக்கு வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே பூண்டு விற்பனைக்கு வந்துள்ளது. தஞ்சாவூரில் கடந்த வாரம் வரை பூண்டு விலை குறைந்து காணப்பட்டது. தற்போது வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை அதன் ரகத்திற்கு ஏற்றவாறு அதிகரித்துள்ளது. பூண்டு விளைவிக்கும் பகுதியில் தற்போது விளைச்சல் தொடங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து மட்டும் தான் பூண்டு வந்து கொண்டு இருக்கிறது. ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், சீனா பூண்டுகள் வந்தால்தான் விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi