தர்மபுரி, மே 8: பென்னாகரம் அடுத்துள்ள ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகள் ஜீவிதா (24). பென்னாகரம் மாங்கரை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் (33). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மணிகண்டன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இதனால், ஜீவிதா தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார். மணிகண்டன் மாதத்திற்கு ஓரிரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்வார்.
இந்நிலையில், வரதட்சணை கேட்டு ஜீவிதாவை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த ஜீவிதா, பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கணவர் மணிகண்டன், மாமியார் சுந்தரம்மாள் (54), கொழுந்தனார் ஹரி (31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, சுந்தரம்மாள், ஹரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.