புழல், மே 24: மாத்தூரை சேர்ந்த செபாஸ்டின் டேனியல் (24) என்பவர், சமீபத்தில் குட்கா வழக்கில் எழும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர், நேற்று முன்தினம் சிறை வளாகத்தில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கிழித்துக்கொண்டு பிளேடை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக கைதிகள் சிறைக்காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த காவலர்கள், செபாஸ்டின் டேனியலை மீட்டு சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் செபாஸ்டின் டேனியலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வயிற்றை பிளேடால் கிழித்து கைதி தற்கொலை முயற்சி
0