அறந்தாங்கி: வயல்களில் களை எடுக்கும் பணிக்கு பெண்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வருவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கி ஆவுடையார்கோவில், பொன்பேத்தி உள்ளிட்ட பகுதியில் ஆயிரகணக்கான நில ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. நெல் விவசாயம் செய்யப்பட்டு உள்ள நிலங்களில் பெண்கள் களை எடுக்க ஒரு நபருக்கு ரூ.250 சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படி வயல்களில் களை எடுக்க பெண்களை சரக்கு வாகனங்கள் மூலம் ஊருவிட்டு ஊர் அழைத்து வருகின்றனர். அவர்களை மீண்டும் சரக்கு வாகனங்களில் சொந்த ஊருக்கு அழைத்து செல்கின்றனர். இப்படி சரக்கு வாகனங்களில் நாளுக்கு நாள் களை எடுக்க பெண்களை அதிகப்படியாக ஏற்றி வருகின்றனர். இது ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். அவ்வாறு பெண்களை ஏற்றி வரும்போது, சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. தற்போது அறந்தாங்கியில் இருந்து காலை நேரத்தில் அதிகப்படியான பெண்களை பாதுகாப்பு இல்லாமல் சரக்கு வாகனங்களில் களை எடுக்க ஏற்றி செல்கின்றனர். இதை போக்குவரத்து போலீசார். கண்டுக்கொள்வது இல்லை. எனவே இது போன்ற விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.