கருங்கல், ஆக.18: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள 18 காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்தனர். அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தனது ஒரு மாத சம்பளமான ₹1.5 லட்சத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. விடம் வழங்கினார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.