தொண்டி, மே 29: தொண்டி அருகே முகிழ்த்தகம் வனத்து சின்னப்பர் ஆலய 34ம் ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது.
தொண்டி அருகே முகிழ்த்தகம் வெள்ளாள கோட்டை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த வனத்து சின்னப்பர் ஆலய திருவிழா கடந்த 20ம் தேதி பங்கு தந்தை வியாகுல அமிர்தராஜ் தலைமையில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி மற்றும் அன்னதானம் நேற்று நடைபெற்றது. தொண்டி அமலவை அருட்சகோதரிகள், இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் இறை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.