வந்தவாசி,ஏப்.17: வந்தவாசி நகர திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ேநற்று பெரிய மசூதி வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் எம்எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். வந்தவாசி நகர திமுக மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு மற்றும் அனைத்து ஜமாத் இணைந்து பெரிய மசூதி வளாகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்சிக்கு பெரிய மசூதி முத்தவல்லி அப்துல்காதர் சரீப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் எச்.ஜாலல், துணை தலைவர் க.சீனுவாசன், முன்னாள் நகராட்சி தலைவர் அப்சர்லியாகத், பள்ளிவாசல் நிர்வாகிகள் ராசி கே எம் மீரா, ஏ.லியாகத்அலி, எஸ்.அன்சாரி, பாபு, அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ஏ.தயாளன் வரவேற்றார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர்கே.ஆர். சீதாபதி, பஜார் மசூதி பொருளாளர் அ.ஜா.இஷாக் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் அப்துல் கலீம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் வீரபத்திரன், விடுதலை சிறுத்தை நகர செயலாளர் ஏழுமலை, மறுமலர்ச்சி முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்டச் செயலாளர் அக்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அவைத் தலைவர் ஏ. நவாப் ஜான் நன்றி கூறினார்.