வத்திராயிருப்பு, ஜூன் 26: வத்திராயிருப்பு அருகே நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் பாண்டி(31). இவர் நேற்று மாலை போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள குணவந்தனேரிகண்மாய் கரையில் உள்ள பனை மரத்தில் நுங்கு வெட்டுவதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மரம் முறிந்து கீழே தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பாண்டிக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நுங்கு வெட்டுவதற்காக பனை மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.