வத்திராயிருப்பு, பிப்.15: வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் ஊராட்சியில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் குழுவினர் உற்பத்தி செய்த விவசாய பொருட்கள் விற்பனை சந்தை நடைபெற்றது. இதில் மகாராஜபுரத்தைச் சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்த காய்கறிகள், கீரை, சிறுதானியங்கள் உள்ளிட்ட விளை பொருட்கள் 15 கடைகளில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகாராஜபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் நடத்தப்பட்ட விற்பனை சந்தையில் ரூ.10 ஆயிரம் அளவுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
மகளிர் திட்ட வட்டார மேலாளர் கணேஷ்ப்ரியா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கற்பகம் ஏற்பாடுகளை செய்தனர். வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள ஊராட்சிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு ஊராட்சிகளிலும் மகளிர் குழுக்கள் மூலம் விளைபொருள் சந்தை நடைபெறும் என தெரிவித்தனர்.