வத்தலக்குண்டு, ஜூன் 5: வத்தலக்குண்டு அருகேயுள்ள கட்டக்காமன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (70). விவசாயி. இவர் நேற்று காலை அப்பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆண்டிபட்டியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வேன் ஒன்று இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனிச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் வத்தலக்குண்டு இன்ஸ்ெபக்டர் அமுதா வேன் டிரைவர் ஆண்டிபட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வத்தலக்குண்டு அருகே வேன் மோதி விவசாயி பலி
0
previous post