வத்தலக்குண்டு, ஆக. 12: வத்தலக்குண்டு அருகே பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கை வசதியில்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.வத்தலக்குண்டு-நிலக்கோட்டை சாலையில் மல்லணம்பட்டி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது.
அதில் பயணிகள் உட்காருவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பலகைகள் மாயமாகி உள்ளது. இதனால் இங்கு பேருந்து ஏற வரும் பயணிகள் அமருவதற்கு வழியின்றி, நீண்ட நேரம் நின்றபடி பேருந்துக்காக காத்திருக்கின்றனர். மேலும் நிழற்குடை பராமரிப்பின்றி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். பயணிகள் நலன் கருதி, இந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.