வத்தலக்குண்டு, அக். 29: வத்தலக்குண்டு ஒன்றியம் எழுவனம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெரியப்பநாயக்கன்பட்டி, எழுவனம்பட்டி ஊர்களில் உள்ள மயானங்களை ஆதிதிராவிடர் நலத்துறை குக்கிராம மயான மேம்பாட்டு திட்டத்தில் ரூ.23 லட்சம் நிதியில் மேம்படுத்துவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா மணிவண்ணன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் லதா முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திமுக ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் கலந்து கொண்டு பூமி பூஜை மயான மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் பரமன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு நிர்வாகி ராஜ்குமார், நிர்வாகிகள் நரசிம்மன், சதிஷ், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.