பாலக்காடு, ஜூன் 14: இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் காவல் நிலையத்தில் மகளிர் போலீசார் உடை மாற்றும் அறையில் கேமரா மறைத்து வைத்து வீடியோ படங்கள் எடுத்து, ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பி மிரட்டிய சிவில் போலீஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியார் காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் அதிகாரியாக பணி புரிபவர் வைசாக். இவர் காவல்நிலையத்தில் மகளிர் போலீசார் உடை மாற்றும் அறையில் மொபைல் கேமரா மறைத்து வைத்து வீடியோ படம் பிடித்துள்ளார். இதனை வைத்து மகளிர் போலீசாருக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பி மிரட்டி வந்துள்ளார். பெண் போலீஸ் ஒருவர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் அதிகாரி வைசாக் மீது புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, சிவில் போலீஸ் அதிகாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.