ஜெயங்கொண்டம், ஆக. 17: மாவட்ட ஆட்சியரிடம் நற்சான்று பெற்ற வட்டார ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளருக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்தினர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து திட்ட கூறுகள் சார்ந்த பணிகளை ஆண்டிமடம் ஒன்றியம் மாவட்ட அளவில் சிறப்பாகவும், சரியாகவும் செய்து முடித்ததை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், பள்ளி உதவி ஆய்வாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களின் பரிந்துரையின் பேரில் 78வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜை வாழ்த்தி பாராட்டுச்சான்று வழங்கினார். மேற்பார்வையாளர் அருமைராஜை ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். நிறைவாக அருமை ராஜ்நன்றி தெரிவித்தார்.