நாசரேத், ஆக. 31: திருச்செந்தூர் வட்டார அளவிலான கால்பந்து போட்டிகள், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மைதானத்தில் நடந்தது. 14 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் பிரிவு கால்பந்து போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி அணியும், காயல்பட்டினம் எல்கே மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளது. இதில் மூத்த கால்பந்து பயிற்சியாளர்கள் நசரேயன், ராபர்ட்சன் சாலமோன், பொன்ராஜ் மற்றும் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களான பிரைட்டன் ஜோயல், ப்ரூமல், சேவியர், இஸ்மாயில், ஜமால், டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மர்காஷிஸ் பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் குணசீலராஜ், உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால்,சுஜித் செல்வசுந்தர், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
வட்டார கால்பந்து போட்டி: நாசரேத் பள்ளி முதலிடம்
previous post