மோகனூர், ஆக.24: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ், மோகனூர் வட்டார வள மையத்தில் வட்டார அளவிலான குழு கூட்டம் நடந்தது. சிறப்பு பயிற்றுநர் ஆனந்தகுமார் வரவேற்று பேசினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு மோகனூர் வட்டார கல்வி அலுவலர்கள் இளங்கோ மற்றும் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல், சிறப்பு கல்வி அளித்தல், இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பெறுவதை உறுதி செய்தல், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை இளம் வயதிலேயே கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், ஒற்றுமையை வளர்ப்போம் என்ற உறுதிமொழியை, ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள்கிழமை தோறும் அனைத்து பள்ளிகளிலும் எடுத்தல் போன்ற பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ராதிகா, ஆகியோர் கலந்து கொண்டனர். உமாதேவி நன்றி கூறினார்.
வட்டார அளவில் குழு ஆலோசனை கூட்டம்
previous post