சிவகங்கை, ஆக. 19: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் வட்டார அளவிலான தொழில் கடன் வசதியாக்கல் கூட்டங்கள் நடைபெற உள்ளது. ஆக.22 தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி வட்டார அளவிலான கூட்டம், ஆக.23 மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மானாமதுரை மற்றும் இளையான்குடி வட்டார அளவிலான கூட்டம்.
ஆக.25 திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருப்புவனம் வட்டார அளவிலான கூட்டம், ஆக.29 காரைக்குடி, பூமாலை வணிக வளாகத்தில் சாக்கோட்டை வட்டார அளவிலான கூட்டம், ஆக.30 திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருப்பத்தூர் மற்றும் கல்லல் வட்டார அளவிலான கூட்டம், செப்.1 சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் வட்டார அளவிலான கூட்டமும் நடைபெற உள்ளன. கூடுதல் விபரங்களுக்கு 89255 33989, 82480 12801, 89254 75526 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.