கரூர், ஜூன். 18: கரூரில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக, வெள்ளியணை காவல் நிலையத்தில் கடந்த மே 30ம்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கணாங்குறிச்சியை சேர்ந்த சூர்யா (34) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த நபரை, மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வடிகால் உடைந்து சாலையில் மெகா பள்ளம் மணல் கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
0
previous post