Monday, February 26, 2024
Home » வடலூர் அருகே சோகம் பைக் மீது டிராக்டர் மோதி சிறுமி, பெண் பலி

வடலூர் அருகே சோகம் பைக் மீது டிராக்டர் மோதி சிறுமி, பெண் பலி

by Karthik Yash

வடலூர், ஜன. 4: வடலூர் அருகே டிராக்டர் மோதி சிறுமி மற்றும் பெண் பூ வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த தெற்கு சேப்பாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா செல்வம். இவரது மனைவி சரண்யா. விவசாய வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் யாழினி என்ற பெண் குழந்தை உள்ளது. யாழினி மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ராஜா செல்வம் தனது மகள் யாழினியை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கம்சலா (52), பூ வியாபாரி. மந்தாரக்குப்பம் வரை நானும் வருகின்றேன் என கூறி இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு உள்ளார்.

இதைதொடர்ந்து மூவரும் இருசக்கர வாகனத்தில் மந்தாரக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். சேப்பாளாநத்தம் வடக்கு விஏஓ அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே சாலை பணிக்காக தண்ணீர் எடுத்து செல்லும் டிராக்டர் ஒன்று அதிவேகமாக வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று எதிரே வந்த ராஜா செல்வம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே யாழினி, கம்சலா ஆகிய இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ராஜா செல்வம் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் யாழினி, கம்சலா ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த ராஜா செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜா செல்வம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சிறுமியை அழைத்து சென்றபோது, விபத்தில் பெண்ணுடன் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

five × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi