வடமதுரை, ஆக. 14: வடமதுரை ஒன்றியம் காணப்பாடியில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் காணப்பாடி, சிங்காரக்கோட்டை, வேல்வார்கோட்டை, வேலாயுதம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர்கள் பாண்டி, அங்கம்மாள் ஐயப்பன், ராஜாமணி, விநாயகம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். காந்திராஜன் எம்எல்ஏ தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இம்முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர். இதில் ஒரு சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. இதில் தாசில்தார் சரவணகுமார் , வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் சுப்பையன், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாண்டி, பேரூர் செயலாளர் கணேசன், சேர்மன் கருப்பன், மாவட்ட இலக்கிய அணி இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.