நாகர்கோவில், ஜூன் 5: நாகர்கோவில் வடசேரி பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நேற்று முன் தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப் போது, டிரைவர் மது போதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. தொடர்ந்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் பார்வதிபுரம் பாலம் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாததும் தெரிய வந்தது. இதையடுத்து வாலிபர்கள் 2 பேருக்கும் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடசேரி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
வடசேரி பஸ் நிலையத்தில் பார்க்கிங் செய்த 3 பைக்குகள் பறிமுதல்
0
previous post