குன்னம், ஜூலை. 26: வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பை குடிக்காடு பேரூராட்சியில் உள்ள வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. திருமாந்துறை, பெண்ண கோணம், ஆடுதுறை, ஒகளூர் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் திருமண உதவித்தொகை முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்களை வருவாய் ஆய்வாளர் சிவராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஐயப்பன், பாலமுருகன், சேஷாத்திரி மனுக்களை பெற்றனர். மொத்தம் 5 மனுக்களே வந்தன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறும் சமூக நல பாதுகாப்பு திட்ட முகாம் குறித்து எங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் முகாம் நடைபெறுவது தெரியவில்லை எதிர்காலத்தில் முகாம் நடைபெறுவது குறித்து வட்டாட்சியர் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.