கோவை, நவ. 29: கோவை மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில், துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் 48வது பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வாயில் முன்புறம் மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் அன்புச்செழியன் தலைமையில் 15 கிலோ கேக் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திமுக சட்டத்துறை மாநில இணை செயலாளர் வக்கீல் கே.எம்.தண்டபாணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் ரவிச்சந்திரன், அருள்குமார், கிருஷ்ணமூர்த்தி, முத்துவிஜயன், கண்ணன், சிவக்குமார், விஜயராகவன் மற்றும் ஜி.டி.ராஜேந்திரன், கனகராஜ், ராஜப்பன், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் மருதுபாண்டியன், துணை தலைவர் மணிவேல் துணை அமைப்பாளர்கள் விக்ரம், எலிசபெத் ராணி, வெற்றி, கோகிலவாணி, தமிழ்செல்வி, எஸ்.ரவிச்சந்திரன், டி.ரவிச்சந்திரன், ஆறுமுகம், அசோக்குமார், ராஜமாணிக்கம், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.