கோவை, பிப். 19: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழு சார்பில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்புறம் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும், வக்கீல்களின் சேம நல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தவேண்டும்,
ஒன்றிய அரசின் புதிய வழக்கறிஞர்களின் சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. எனவே, அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி, இப்போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டுக்குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.