சேலம், ஜூன் 17: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). வழக்கறிஞரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்னதானப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை டூவீலரில் வந்த 3 சிறுவர்கள் வழிமறித்தனர். பின்னர் அவரை தாக்கி அவரிடமிருந்த 41 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்துச்சென்றனர். இதுபற்றி மணிகண்டன் அன்னதானப்பட்டி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி, மணிகண்டனிடம் செல்போனை பறித்துச்சென்ற 3 சிறுவர்களையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
வக்கீலை தாக்கி செல்போன் பறித்த 3 சிறுவர்கள் கைது
0
previous post