வானூர், ஆக.19: வானூர் தாலுகா திருவக்கரை கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீவக்கிரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வாராந்திர ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி மாலையில் வக்கிரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து முடிந்தது. இதையடுத்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு 4.30 மணி முதல் 6:00 மணி வரையில் நடந்த ராகுகால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.