ஆவடி, நவ. 26: ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (54) பட்டாபிராம் மின்சார அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக பட்டிபிராம் ரயில் நிலையத்தில் 1வது நடைமேடையில் காத்திருந்தபோது 4 மர்ம நபர்கள் மது போதையில் பயணிகளை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்தனர். இதை தட்டி கேட்ட பரமசிவத்தை பைப்பால் வாய் மற்றும் தலையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பரமசிவம் வலியில் கதறினார். இதைக் கண்ட சக பயணிகள் உடனடியாக ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
லைன்மேன் மீது தாக்குதல்
0