செய்முறைபாஸ்மதி அரிசியை முதலில் வேக வைத்து ஆற வைத்துக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை – 1, கிராம்பு – 1, ஏலக்காய் – 1, பிரியாணி இலை – 2 போட்டு பிறகு வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின் வேக வைத்த அரிசியை அதன்மேல் போட்டு சமமாகச் செய்யவும். அதன்மேல் சிறிதளவு நெய் மற்றும் குங்குமப்பூ சாறு,; Fried onion, கொத்தமல்லி, புதினா சேர்த்து அலுமினியம் பாயில் கொண்டு; கலர் செய்யவும். அதன்மேல் மூடி போட்டு 10 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கி ஆறியவுடன் பரிமாறவும். கமகமக்கும் லேயர் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் காளான் ஃப்ரை (வறுவல்) சேர்த்து சாப்பிடலாம். (தம் பிரியாணி செய்ய அரிசியை வேக வைக்கும் முறை)குறிப்பு: பாஸ்மதி அரிசியை வேக வைப்பதற்கு 5 கப் தண்ணீர், 1 கப் அரிசி தண்ணீர் நன்றாக கொதி வந்தபின் பட்டை – 1, கிராம்பு – 1, பிரியாணி இலை – 1, நட்சத்திரப்பூ – 1 சேர்த்து கொதி வந்தபிறகு அரிசியை போட்டு 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும்.
லேயர் பிரியாணி
50
previous post