மார்த்தாண்டம், ஜூன் 5: லிஸ்டர் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பாக காளை சந்தை அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் லிஸ்டர் மருத்துவமனையின் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் ஆனந்தி அரவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காளை சந்தை அரசு தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பென்சில் பாக்ஸ் முதலியவை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காளை சந்தை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் செராபின் விலாசினி லிஸ்டர் மருத்துவமனை மேலாளர் தினகர் முகேஷ், மார்த்தாண்டம் நகர வர்த்தகர் சங்க பொருளாளர் ஜெயசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
லிஸ்டர் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்
0