ராமநாதபுரம், ஆக.2: ராமநாதபுரம் தனியார் கல்லூரி பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஐஸ்வர்யாலெட்சுமி. இவர் கடந்த 2021 ஆண்டு முதல் பல்வேறு ஊர்களுக்கு சென்று 535 மொய்க்கவர்களை சேகரித்து புதுமையாக வடிவமைத்து லிம்கா உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். இதுபோன்று கீழக்கரை தனியார் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் சித்திக் ரினாப் ஹஸ் காணொலி காட்சி வாயிலாக 500 புகைப்படத்தை பார்த்து ஆங்கில வார்த்தைகள் மூலம் விளக்கம் அளித்து சாதனை படைத்தார். இவர்கள் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.