திருச்சி, செப். 20: திருச்சி மாவட்டம், லால்குடி வாளாடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 22ம்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் நகர், கீழ்ப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனுார், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதுார், மேலவானாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லுார், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆர்.வளவனுார், பல்லபுரம், புதுார், உத்தமனுார், வேளாண் கல்லுாரி, ஆங்கரை, சரவணாநகர், தேவிநகர், மற்றும் கைலாஸ்நகர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.