லால்குடி, ஜூன் 27: லால்குடி அடுத்த குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய போதை ஒழிப்பு தினத்தையொட்டி, கல்லூரி மாணவ-மாணவர்கள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த குமுளூர் ஊராட்சியில் செயல்பட்டுவரும் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய போதை தடுப்பு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமையில் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை மாணவ மாணவிகள் எடுத்துக் கொண்டனர். காணக்கிணியநல்லூர் உதவி ஆய்வாளர் சத்யா தேவி, தனிப்பிரிவு காவலர் முத்துக்குமார் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் அசோக்குமார், வீரமணி, சுலைமான் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் நன்றி கூறினார். அலுவலக எழுத்தர் பாலகுமார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். நாட்டு நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சக்திவேல் பேராசிரியர் சுகன்யா, நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.