கமுதி, ஆக. 26: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பூமாவிலங்கை சேர்ந்தவர் முனியசாமி (31). இவர் தற்போது கோட்டைமேட்டில் வசித்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு முதுகுளத்தூரில் இருந்து கமுதி நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நம்மாழ்வார் வேளாண்மை தொழில் நுட்ப கல்லூரி அருகே வந்த போது, எதிரே வந்த லாரி ஒன்று டூவீலரின் மீது மோதியதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முனியசாமியின் உடலை மீட்டு உடல் பிரேதபரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.