கிருஷ்ணகிரி, ஆக.30: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த புவன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (33). லாரி டிரைவரான இவர், கிருஷ்ணகிரிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில், கம்மம்பள்ளி கூட்ரோடு அருகே நேற்று முன்தினம் காலை, தான் ஓட்டி சென்ற லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு, டயர்களின் காற்றளவை சோதித்து கொண்டிருந்தார். பின்பக்க சக்கர டயர்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக பின்னால் வந்த லாரி மோதியது. இதில், படுகாயமடைந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுபற்றி மகாராஜகடை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி டிரைவர் பலி
previous post