வெள்ளக்கோவில், ஜூன் 3: கேரள மாநிலம் பந்தளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (62). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் கரூர் அருகே உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு கேரளா செல்ல வெள்ளகோவில் வழியாக வந்துள்ளார். அப்போது, வெள்ளகோவில் கோவை ரோடு அங்காளம்மன் கோவில் அருகில் லாரியை நிறுத்திவிட்டு சிறிது ஓய்வெடுத்துள்ளதாக தெரிகிறது. அப்போது, அவ்வழியாக பைகில் வந்த இருவர் விஜயகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.1000 பணம் மற்றும் மொபைல் போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.