Tuesday, June 25, 2024
Home » லாரி சக்கரத்தில் சிக்கிய வாலிபர் உயிர் தப்பினார்

லாரி சக்கரத்தில் சிக்கிய வாலிபர் உயிர் தப்பினார்

by Karthik Yash

விருத்தாசலம், மே 19: விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலையில் இருந்து பூதாமூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் லாரி வளைந்த போது திடீரென பைக்கில் வந்த நபர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில், லாரியின் முன்பக்க சக்கரத்தில் பைக் சிக்கிக் கொண்டு பலத்த சேதமடைந்த நிலையில், அவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவலின் பேரில், அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் லாரியின் சக்கரத்தில் சிக்கி இருந்த பைக்கை நீண்ட நேரம் போராடி மீட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

fifteen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi